விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

இலவச மருத்துவ முகாம்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 

நமது காட்டம்பட்டியில் 10 - 12 - 2017 (ஞாயிற்றுக்கிழமை) வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் நமது வளர் இளம் நற்பணி சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

 இந்த மருத்துவ முகாமில் காட்டம்பட்டி மற்றும் அதற்கு அருகில் உள்ள பல கிராமங்களில் இருந்து 100 - க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

இந்த முகமானது மனித உடலில் உள்ள

B மற்றும் C எனப்படும் இரண்டு வகையான வைரஸ் கிருமிகளை கண்டறியவும், 
கல்லிரல் தொடர்பான கல்லிரல் சுருக்கும், 
பசியின்மை, 
மது அருந்துவதினால் ஏற்படும் கல்லிரல் பாதிப்பு, 
சீரற்ற இரத்த அழுத்தம்

ஆகிய பல்வேறு விதமான நோய் கண்டறியும் நோக்கத்துடனும். அத்தகு பாதிப்பு உடையவர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நடைபெற்றது.

ரூபாய். 1500 மதிப்புள்ள பரிசோதனை நமது மக்களுக்காக இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற உதவிய வி.ஜி.எம் மருத்துவமனைக்கும் அதன் நிறுவனர் Dr.திரு.மோகன்பிரசாத் அவர்களுக்கும் காட்டம்பட்டி வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 



































No comments:

Post a Comment