விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

நில வேம்பு கசாயம் வழங்குதல்

01-10-2017 (அக்டோபர் -1- ஞாயிறு) அன்று காட்டம்பட்டி வளர் இளம் நற்பணி சங்கத்தின் சார்பாக ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நில வேம்பு  கசாயம் வழங்கப்பட்டது.

இது உடல் நலனை மேம்படுத்தவும் பல்வேறு வகையான பிணிகளுக்கு எதிர்ப்பு சக்தியாகவும் செயல் படுகிறது.

இத்தகு நில வேம்பு கசாயத்தில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகை பொருட்கள் பின்வருமாறு :

  சுக்கு
  மிளகு 
  திப்பிலி 
  துளசி 
  சந்தன தூள் 
  அசுவதந்த 
  அதிமதுரம் 
  பேய்புடல் 
  தூது வலை 
  கோரைக்கிழங்கு 
  பிசுன பிருந்தை
  வெட்டி வேரு
  விளாமிச்சை
  நில வேம்பு 

 செய்முறை :

 நில வேம்பு கசாயம் பைகளில் திட நிலையில் ஒரு கிலோ அல்லது அரை கிலோ எனும் அளவில் கிடைக்கும்.

 நமது அளவு ஒரு கிலோ என்றால் அதற்க்கு 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுள் திட நில வேம்பை போட்டு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

 கொத்தி நிலை அளவீடு 100 லிட்டர் தண்ணீர் 80 லிட்டர் ஆன பிறகு அதனை எடுத்து ஆறவைத்த பின்னர் குடிக்கலாம்.

இதனை நீங்களும் குடித்து வர உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

குறிப்பு : நீங்கள் நீல வேம்பு வாங்கும் இடத்தைப் பொறுத்து அதன் மூலிகைகள் வேறுபாடும் அனால் நில வேம்பு அதில் பிரதான இடம் வகிக்கும்.


 நன்றி | வளர் இளம் நற்பணி சங்கம் | காட்டம்பட்டி 

No comments:

Post a Comment