விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திரு.அப்துல் கலாம் அய்யா பிறந்த நாள் - 2017






நமது காட்டம்பட்டியில் திரு.அப்துல் கலாம் அய்யா அவர்களின் பிறந்தநாளை (15.10.2017) முன்னிட்டு வளர் இளம் நற்பணி சங்கம் சார்பாக கடந்த 14 .10.2017 அன்று காட்டம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் சிறப்பான முறையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியுடன் வளர் இளம் நற்பணி சங்கத்தின் சார்பாக பள்ளிக்குழந்தைகளுக்கு தமிழர்களின் பழம் பெரும் வீரக்கலையான சிலம்பாட்ட பயிரிச்சியினை இலவசமாக கற்றுத்தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மற்றும் 15.10.2017 - ம் ஆண்டு காட்டம்பட்டி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வளர் இளம் நற்பணி சங்கத்தின் பெயர் பலகையின் அருகில் திரு.அப்துல் கலாம் அய்யா அவர்களின் திரு உருவ படத்துக்கு மரியாதையை செய்தபின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

மற்றும் காட்டம்பட்டி வளர் இளம் பூங்காவின் அருகில் நூறு பனை விதைகள் நடப்பட்டது. பனை மரங்கள் வளர வளர நிலத்தடி நீர்வரத்து அதிகரிக்கும்.






நிகழ்வுகள்

No comments:

Post a Comment